நீண்ட நாள் கழித்து மனதார சிரித்தேன் என்று லிட்டில் ஹார்ட்ஸ் படத்தை நடிகர் நானி பாராட்டியுள்ளார்.
புதுமுகங்களான மௌலி தனுஜ் பிரஷாந்த் மற்றும் சிவானி நாகரம் நடிப்பில் சிறிய பட்ஜெட்டில் உருவான லிட்டில் ஹார்ட்ஸ் படம் 4 நாளில் உலகளவில் 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இப்படத்தை பார்த்த நானி படக்குழுவைப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், லிட்டில் ஹார்ட்ஸ் திரைப்படத்தை பார்த்து ரசித்தேன் என்றும் நீண்ட நாளுக்கு பிறகு படத்தை பார்த்து மனதார சிரித்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.