மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் லகு உத்யோக் பாரதி அமைப்பு முதன்மையான பங்கு வகிப்பதாக மாநில பொதுச் செயலாளர் கல்யாண சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள சிறு குறு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக அமைக்கப்பட்ட லகு உத்யோக் பாரதி அமைப்பானது, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
இதில், சேலம் கிளையின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவானது தனியார் விடுதியில் நடைபெற்றது. அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் துணைத்தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய பொதுச்செயலாளர் கல்யாணசுந்தரம், மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் லகு உத்யோக் பாரதி முதன்மை பெறுவதாக தெரிவித்தார்.