திருச்சியில் காந்தி மார்க்கெட் வழியாகத் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளக் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தவெகத் தலைவர் விஜய் வரும் 13ஆம் தேதி திருச்சியின் டிவிஎஸ டோல்கேட் பகுதியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வழியாகத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். பேருந்து நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அந்த வழியாகச் செல்ல காவல்துறை அனுமதி மறுத்தது.
இதனைத் தொடர்ந்து, தவெகவினர் மாற்றுப்பாதை தேர்வு செய்து காவல்துறையிடம் சமர்ப்பித்தனர். அதன்படி, திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து பாலக்கரை, மரக்கடை மற்றும் காந்தி மார்கெட் வழியாகச் செல்ல காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, திருச்சி மேற்கு, கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.