இட்லி கடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் அவரே இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. இப்படத்தில் நடிகர் அருண் விஜய், நடிகை நித்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் இட்லி கடை படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 14 ஆம் தேதி சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றே படத்தின் டிரெய்லரும் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.