கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக உணவகம் மீது சுவர் சரிந்து விழுந்ததில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக ஒன்று முதல் 6-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், 7 ரோடு சந்திப்பில் உள்ள சேட் என்பவரது உணவகம் மீது தனியார்க் கிளப்-ன் சுவர் சரிந்து விழுந்தது. விபத்தின்போது அப்பகுதியில் ஆட்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.