இந்தியாவில் பயன்படுத்தும் UPI பணபரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் UPI பணபரிவர்த்தனை இந்திய தேசிய கட்டண கழகத்தால் உருவாக்கப்பட்டது. இது ஒரே மொபைல் பயன்பாட்டில் பல வங்கிக் கணக்குகளை இணைத்து, பாதுகாப்பாகப் பணம் அனுப்பவும், பெறவும் உதவுகிறது.
இந்தியாவில் கோடிக்கணக்கானோர் UPI பணபரிவர்த்தனைகளை தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர். அதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், 28-வது உலகளாவிய போஸ்டல் காங்கிரஸ் மாநாடு துபாயில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜோதிராதித்யச் சிந்தியா UPI–UPU ஒருங்கிணைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இதன்மூலம் 192 நாடுகளில் UPI பணபரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்றும். விரைவில் இந்த நடைமுறை அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.