குடியரசு துணை தலைவர் தேர்தலில் இண்டி கூட்டணியைச் சேர்ந்த 14 எம்பிக்கள் மாற்றி வாக்களித்து குறித்து விசாரிக்க வேண்டும் என, காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
குடியரசு துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் எதிர்பார்த்ததைவிட 14 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார். ஆனால், இண்டி கூட்டணி வேட்பாளரான சுதர்ஷன் ரெட்டிக்கு எதிர்பார்த்ததை விட குறைவான வாக்குகளே கிடைத்தது.
இதன்மூலம், எதிர்க்கட்சியை சேர்ந்த 14 எம்பிக்கள் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து வாக்களித்தது தெரியவந்தது. இந்த விவகாரம் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், இது குறித்து விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.
மறுபுறம், தங்களுக்கு ஆதரவாக வாக்களித்த எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நன்றி தெரிவித்துள்ளார்.