ஓபிஎஸ்-ஐ எந்த நேரமும் அழைத்து பேச தயாராக இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தற்போதும் வலுவாகதான் உள்ளது என தெரிவித்தார். 2026-க்கு பிறகு யார் ஐசியூ-விற்கு செல்வார்கள் என்று தெரியும் என்றும் அவர் கூறினார்.
ஓபிஎஸ்-ஐ எந்த நேரமும் அழைத்து பேச தயாராகதான் இருக்கிறேன் என்றும், டிடிவி தினகரனுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து நான் விலக வேண்டிய அவசியமில்லை என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.