வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட விவரங்களின் பின்னணி தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு மாநிலங்களில் பெரிய அளவில் வாக்குத் திருட்டு மோசடி நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும், இதுதொடர்பான அனைத்து ஆதாரங்களையும் மக்களிடம் சமர்பித்து வருவதாகவும் கூறினார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி சமர்ப்பித்த தரவுகள் அனைத்தும் மியான்மரில் தயாரிக்கப்பட்டவை என தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் ஶ்ரீநிவாஸ், சைஃபுல்லா கான் ஆகிய இருவர் இந்த போலி தரவுகளை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.