நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உதவி கோரி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து 19 பேர் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர். அதில் 4 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு பாதி வழியிலேயே தமிழகம் திரும்பிய நிலையில், எஞ்சிய 15 பேர் நேபாளத்தில் உள்ள கைலாஷ் மலைக்கு பயணம் சென்றனர். நேபாளத்தில் வன்முறை காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு சிக்கி தவிக்கும் தமிழர்கள் உதவி கோரி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அதில், தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 15 நிமிட நடைபயணத்தில் சீனா செல்ல முடியும் என்றும், முறையான அனுமதியில்லாமல் சீனாவிற்குள் நுழைய முடியாது என்பதால் எங்கு செல்வது என்று தெரியாமல் பரிதவித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களை தமிழகத்திற்கு அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.