பிரான்ஸ் நாட்டில் அந்த நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.
ரென்னெஸ் என்ற இடத்தில் Block Everything என்ற இயக்கத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர், முகமூடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுக்க முயன்றதால் ஆத்திரத்தில் பேருந்துக்கு தீ வைத்தனர்.
நிலைமை கட்டுப்பாட்டை மீறியதை உணர்ந்த போலீசார், கண்ணீர் புகை குண்டுகள் மூலம் போராட்டத்தை கலைக்க முயன்றனர். பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலான நிலையில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதுதொடர்பாக சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர். உள்துறை அமைச்சர் புரூனோ ரெட்டைல்லோ, ரென்னெஸ் நகரில் ஒரு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது என்றும், மின்சார கம்பி சேதமடைந்ததால் தென்மேற்கு பகுதியில் ரயில் போக்குவரத்து தடைபட்டது என்றும் கூறினார். மேலும், போராட்டக்காரர்கள் கிளர்ச்சி சூழலை உருவாக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.