பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாகவி பாரதியாரின் 104ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையிலும் பாரதியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்டுள்ள பாரதியாரின் உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.