வேலூர் சேண்பாக்கத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அமைச்சர் துரைமுருகனை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சேண்பாக்கம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது முள்ளிப்பாளையம் வீராசாமி தெருவை சேர்ந்த பெண்கள் அவரை முற்றுகையிட்டனர்.
30 ஆண்டுகளாக தங்கள் பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்றும், உடனடியாக அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துரைமுருகன் தெரிவித்தால், மக்கள் கலைந்து சென்றனர்.