ஆர்.எம்.கே.வி. நிறுவனம் 101ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி புதிதாக 15 பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்துள்ளது.
ஆர்.எம்.கே.வி. நிறுவனம் தொடங்கப்பட்டு 101ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் புதிய பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நளினமான வேலைப்பாடுகளுடன் கூடிய புடவைகள், கைத்தறி பட்டுப் புடவை, கைதேர்ந்த நெசவுக் கலைஞர்களால் தனித்துவமாக உருவாக்கப்பட்ட புடவைகள் என பல்வேறு புதிய புடவைகள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் ஆர்.எம்.கே.வி. டிசைன் ஸ்டூடியோவின் இந்த வருடத்திற்கான மிகச்சிறந்த இயற்கை வண்ண பட்டுப் புடவையும் அறிமுகம் செய்யப்பட்டது.