அமெரிக்காவில் டிரம்பின் ஆதரவாளராக அறியப்படும் சார்லி கிர்க் என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யூட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த கிர்க், பொதுவெளியில் மக்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சார்லி கிர்க்கை சுட்டார். அது அவரின் கழுத்தில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் கிர்க்கை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நபரை எஃப்.பி.பி.ஐ கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிர்க் மரணத்திற்கு அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்க மக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் வெள்ளை மாளிகையில் அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.