குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்கிறார்.
கடந்த ஜூலை 21ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த பதவிக்கான தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்றது.
இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட, தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 452 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், இன்று காலை 10 மணிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவராக பதவியேற்க உள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.