இந்திய ராணுவம் Exercise Siyom Prahar எனப்படும் மிகப் பெரும் தரைப்பயிற்சியை வெற்றிகரமாக நடத்தியது.
இந்த பயிற்சியின் நோக்கம், ட்ரோன் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை சோதித்து உறுதி செய்வது ஆகும். Exercise Siyom Prahar என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சி கடந்த 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்த பயிற்சி உண்மையான போர்க்கள சூழல்களை ஒத்திருக்கும் விதத்தில் நடத்தப்பட்டது. மேலும், கண்காணிப்பு, இலக்கை கண்டறிதல், துல்லியத் தாக்குதல் போன்ற பணிகளில் ட்ரோன்களின் பங்கு குறித்தும் பயிற்சியில் வலியுறுத்தப்பட்டது. இந்த பயிற்சி ராணுவத்தின் உறுதியையும், போர்த் திறனையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.