விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இம்மானுவேல் சேகரனின் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
மங்காபுரம் கிராமத்தில் இடத் தகராறு காரணமாக ஒரே பிரிவை சேர்ந்தவர்கள் இரு தரப்பாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்த முடிவு செய்த ஒரு தரப்பினர் ஊர்வலமாக சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர் தாங்கள் வசிக்கும் பகுதி வழியாக செல்லக்கூடாது என தெரிவித்துள்ளனர்.
இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருடனும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.