15-வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று இன்று பதவியேற்க இருக்கும் சிபிஆருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சிபி.ராதாகிருஷ்ணனை தலைநகர் டெல்லியில் சந்தித்து மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாக கூறியுள்ளார்.
மேலும் தமிழர் ஒருவர் தேசத்தின் உயரிய பதவியை அலங்கரிக்க இருப்பது குறித்த மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.