இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் சட்ட மாணவர்கள் 4 பேர், பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைத்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்தியா – பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தனர்.