நடிகர் விஷால் திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி அவர் பலருக்கும் நன்றித் தெரிவிக்கும் விதிமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு ரசிகர்களுக்கு நன்றித் தெரிவித்து விஷால் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “தன்னுடைய குடும்பம் 3 வேளை நிம்மதியாகச் சாப்பிட தனது ரசிகர்கள் தான் காரணம் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மேலும் இந்த 21 ஆண்டுகாலம் என்பது தன்னுடைய வெற்றி அல்ல என்றும், ரசிகர்களின் வெற்றி எனவும் கூறியுள்ள விஷால், ரசிகர்கள் படம் பார்க்கக் கொடுக்கும் பணத்தை நல்லது செய்யப் பயன்படுத்துவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.