ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய முன்னணி வீரர் லக்ஷயா சென் காலிறுதிக்குள் நுழைந்தார்.
முன்னதாக நடைபெற்ற போட்டியில் சொந்த நாட்டவரான ஹெச்.எஸ்.பிரனோயை எதிர்கொண்ட லக்ஷயா சென், 15க்கு 21, 21க்கு 18, 21க்கு 10 என்ற செட் கணக்கில் பிரனோயை வீழ்த்தினார். இதன் மூலம் லக்ஷயா சென் காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.