சீனாவின் சுச்சுவாங் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சுச்சாங் நகரில் நேற்று ஒரே நாளில் சுமார் 25 சென்டிமீட்டர் அளவிற்குக் கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இதில், கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.