டெல்லி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கடைசி நேரத்தில் பழுது கண்டறியப்பட்டதால் பயணம் ரத்து செய்யப்பட்டது.
ஏர் இந்தியா விமானம் டெல்லி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட தயார் நிலையில் இருந்தது. 200க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்தில் அமர்ந்திருந்தனர்.
அப்போது குளிரூட்டி அமைப்பில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இரண்டு மணி நேரம் முயன்றும் கோளாறைச் சரிசெய்ய முடியாத காரணத்தால் பயணிகளை விமானத்தைவிட்டு இறங்கும்படி விமான பணியாளர்கள் அறிவுறுத்தினர்.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும், விமான நிலையத்தில் காத்திருந்த போது உணவு உட்பட அனைத்து அத்தியாவசிய தேவைகளும் அவர்களுக்குச் செய்து தரப்பட்டதாகவும் ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.