தங்கத்தின் விலைப் புதிய உச்சமாகச் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து, 81 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கம் 90 ரூபாய் அதிகரித்து 10 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 720 ரூபாய் அதிகரித்து 81 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியை பொறுத்தவரை கடந்த 3 நாட்களாக மாற்றமின்றிக் காணப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 142 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.