பஞ்சாப்பை புரட்டிப் போட்ட பெருவெள்ளம் : சுமார் 1.20 லட்சம் ஏக்கர் பாசுமதி நெற்பயிர்கள் சேதம்!
Nov 1, 2026, 01:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பஞ்சாப்பை புரட்டிப் போட்ட பெருவெள்ளம் : சுமார் 1.20 லட்சம் ஏக்கர் பாசுமதி நெற்பயிர்கள் சேதம்!

Murugesan M by Murugesan M
Sep 12, 2025, 04:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஞ்சாப்பைப் புரட்டிப் போட்ட வெள்ளத்தால் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் ஒரு லட்சம் ஏக்கர்ப் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

தொடர்  கனமழை காரணமாகப் பஞ்சாப்பில் உள்ள பக்ரா, பியார் மற்றும் ரஞ்சித் சாகர் அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் பதான்கோட், குர்தாஸ்பூர் மற்றும் அமிர்தசரஸ் மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களில் வெள்ளநீர்  புகுந்தது. பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர்  பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பாசுமதி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

பஞ்சாப் மாநிலம் முழுவதும் 4 லட்சத்து 72 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளுக்குச் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் அரிசி உற்பத்தியில் சுமார் 12 சதவீத அரிசி , பஞ்சாப்பில் இருந்து கிடைக்கிறது. 2024-25ஆம் நிதியாண்டில் சுமார் 142 லட்சம் டன் அரிசியை உலகிற்குப் பஞ்சாப் கொடுத்தது.

குறிப்பாக உயர்தரப் பாசுமதி அரிசியை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது பஞ்சாப். இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாகப் பஞ்சாப் மாநிலத்தில் பாசுமதி அரிசி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags: பாசுமதி நெற்பயிர்கள் சேதம்Punjab floodHeavy floods ravage Punjab: Around 1.20 lakh acres of basmati rice crops damaged
Share
Tweet
SendShare
Previous Post

ரூ.82,000- ஐ நெருங்கும் தங்கத்தின் விலை!

Next Post

இந்தியா-பிரான்ஸ் கூட்டு பணிக்குழுவின் 17-வது கூட்டம் பாரீஸில் நடைபெற்றது!

Related News

வாரணாசி – டெல்லி ஸ்லீப்பர் ரயில் தொடக்கம்; தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்

ஆந்திரா மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; நடந்தது என்ன ?

போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்குவதே இலக்கு – அமித் ஷா உறுதி!

இண்டி கூட்டணி பேரணியை வேறு தேதிக்கு மாற்றுக; வியாபாரிகள் வேண்டுகோள்

சர்தார் வல்லபாய் பட்டேல் 151வது பிறந்தநாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

என்டிஏ மீது மக்களுக்கு நம்பிக்கையும், ஆதரவும் அதிகரித்தள்ளது – நிர்மலா சீதாராமன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தோனேசியாவில் தலைவிரித்தாடும் எரிபொருள் தட்டுப்பாடு : இந்திய பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

வங்கக் கடலில் மீண்டும் புயல் ?; ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தீபாவளி பலகாரங்களில் புதுமை : முறுக்கு முதல் லட்டு வரை சிறுதானியங்களில் விதவிதமான ருசி – சுவை தொகுப்பு!

மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரயில் பாதை விரைவில் சீரமைக்கப்படும் என ரயில்வே அமைச்சர் உறுதி – மா.வெங்கடேசன் தகவல்!

தமிழகத்தில் அடுத்தாண்டு கோடை காலத்தில், மின் தேவை எவ்வளவு? விவரங்களை வெளியிட்டது மத்திய மின்துறை!

திமுக ஆட்சியில் நகராட்சி துறை ஊழல் பணம் டிவி நடிகைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றம்? – லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் உள்ள ஈ.வெ.ராமசாமி சிலையை அகற்ற வேண்டும் – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

இந்தியாவில் வறுமை கோட்டில் இருந்து மீண்டுள்ளவர்களின் எண்ணிக்கை உயர்வு – உலக வங்கி

வெற்றிப் பயணத் திட்டத்தில் பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை அதிகரிப்பு – போக்குவரத்து துறை விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies