நேபாளத்தில் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.
சமூகவலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஆட்சியாளர்களின் ஊழக்கு எதிராகவும் அந்நாட்டு இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
முதல் நாள் போராட்டத்தில் 19 இளைஞர்கள் காவல்துறையால் இறந்ததால் போராட்டம் வன்முறையாகத் தீவிரமடைந்து.
அரசு அலுவலகங்கள், உச்சநீதிமன்றம், அதிபர், பிரதமர்,அமைச்சர்கள் வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டது. மேலும் ஹோட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேபாளத்தில் இதுவரை நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.