ஐதராபாத்தில் கழுத்தை அறுத்து பெண் கொடூரமாக கொலை!
Sep 20, 2026, 06:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஐதராபாத்தில் கழுத்தை அறுத்து பெண் கொடூரமாக கொலை!

Murugesan M by Murugesan M
Sep 12, 2025, 05:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெண் ஒருவர்  கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அரங்கேறியுள்ளது.

ஸ்வான் லேக் அபார்ட்மெண்டில், 50 வயதான ரேணு என்பவர்  தனது மகன் மற்றும் கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ரேணுவின் கணவர் அகர்வால் மற்றும் அவரது மகன், தொழில் ரீதியாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர்.

பின்னர், அகர்வால் தனது மனைவியை  தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், ரேணு, தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை. அவரது வழக்கத்திற்கு மாறான இந்த நடவடிக்கையால் சந்தேகமடைந்த அகர்வால், அலுவலகத்தில் இருந்து மகனுக்கு முன்பே புறப்பட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

கதவு பூட்டப்பட்டு இருந்ததால், பால்கனி வழியாக உள்ளே நுழைந்து கதவைத் திறந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே ரேணு இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அகர்வால், உடனடியாகக் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்கள் ரேணுவின் கை மற்றும் கால்களைக் கட்டிப்போட்டு குக்கரால் தாக்கியதும், தொடர்ந்து கத்தி மற்றும் கத்திரிக்கோலைப் பயன்படுத்தி கழுத்தை அறுத்துக் கொலை செய்ததும் தெரிய வந்தது. பின்பு வீடு முழுவதும் தேடி சுமார் 40 கிராம் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் வீட்டின் பணியாளர் மற்றும் பக்கத்து வீட்டில் வேலைச் செய்து வந்த மற்றொரு நபர், பிரதான குற்றவாளிகளாகச் சந்தேகிக்கப்படுகின்றனர். இதுகுறித்துக் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

Tags: பெண் கொடூரமாக கொலைWoman brutally murdered by slitting her throat in Hyderabad
Share
Tweet
SendShare
Previous Post

நேபாளத்தில் வன்முறை பலி எண்ணிக்கை 51ஆக உயர்வு!

Next Post

சென்னை : ரேஷன் கடைகளுக்கு தனித்துறை கேட்டு ஊழியர்கள் போராட்டம்!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies