முதலையுடன் மல்யுத்தம் செய்து வீடியோ வெளியிட்ட அமெரிக்க யூடியூபரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த சமூக வலைதளப் பிரபலமான மைக் ஹோல்ஸ்டன் அண்மையில் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள லாக் ஹார்ட் ஆற்றில் முதலையின் கழுத்தை இறுக பிடித்தார்.
பின்னர் அதனுடன் மல்யுத்தம் செய்வதுபோல வீடியோ எடுத்துச் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலான நிலையில் அவரது செயலுக்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அவரை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கைகளும் வலுத்த நிலையில், ஆஸ்திரேலிய போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.