திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்குக் கூடுதல் தொகைக் கேட்ட ஊழியருடன் வாக்குவாதம் செய்த திமுக பிரமுகரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பட்டிவீரன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிய திமுகப் பிரமுகரான முருகேசன் என்பவரிடம் ஊழியர் கூடுதல் தொகைக் கேட்டுள்ளார்.
இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. டாஸ்மாக் கடையில் கூடுதல் தொகை வசூலிப்பதற்கு எதிராகத் திமுக பிரமுகர் ஆதங்கத்துடன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.