ஒன்றிணைந்த அதிமுக என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, செங்கோட்டையன் சந்தித்தது பற்றி தமக்கு தெரியாது என தெரிவித்தார்.
ஒன்றிணைந்த அதிமுக என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம் என்றும் அவர் கூறினார். திமுகவிற்கு எதிராக டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் ஒன்று சேர வேண்டும் என்றும், திமுக ஆட்சியை அகற்றி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வரவேண்டும் என்பதுதான் தங்களின் நோக்கம் என்றும் நயினார் நாகேந்திரன் தெளிவுபடுத்தினார்.