50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புகொண்டுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அபராதத்துடன், இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமை காட்டியுள்ளார். இது இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தி இருப்பதை அவர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பேட்டியளித்த அவர், இந்தியா மிகப்பெரிய வாடிக்கையாளராக இருக்கிறது என்றும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததாகவும், இது எளிதான காரியம் அல்ல எனவும் கூறியுள்ளார்.
அது இந்தியாவுடன் விரிசலையும் ஏற்படுத்தி விட்டது என்று ஒப்பு கொண்ட அவர், இந்த பேட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் தெரிவித்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.