சென்னை விம்கோ நகரில் இயங்கி வரும் டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விம்கோ நகரில், செயல்படும் டயர் உற்பத்தி தொழிற்சாலையில் 62 பயிற்சியாளர்கள் உட்பட, 820 ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். ஆண்டுதோறும், ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு போடப்படும்.
ஆனால் மருத்துவ காப்பீட்டு பண கட்டுவதில் நிர்வாகம் மறுத்துள்ளது.,
இதனையறிந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.