கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட இதயம், போக்குவரத்து நெரிலை தவிர்ப்பதற்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்டது.
பெங்களூருவின் யஷ்வந்த்பூரில் இருந்து சேஷாத்ரிபூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இதயம் ஒன்று கொண்டு செல்லப்பட்டது. அப்போது போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அந்த இதயம் சம்பிஜ் சாலையில் இருந்து மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்டது.
இதற்கெனவே மெட்ரோ ரயிலில் பிரத்யேகமாக பெட்டியொன்றும் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வெறும் 20 நிமிடங்களில் இதயம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பெங்களூருவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படும் உடல் பாகங்கள் மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்படுவது இது 2-வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.