தெலங்கானாவில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகிக்கப்பட்டதால் கார் சேதமடைந்ததாக பெட்ரோல் பங்க் ஊழியரிடம் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஷெரிகுடா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் மகேஷ் என்ற நபர் தனது காருக்கு பெட்ரோல் நிரப்பி சென்றுள்ளார். இந்நிலையில் கார் திடீரென இயக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் பழுது நீக்க மெக்கானிக்கை அணுகி உள்ளனர். அப்போது பெட்ரோல் கலந்த தண்ணீரால் கார் சேதமானதாக மெக்கானிக் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு வந்த மகேஷ் வாட்டில் பாட்டிலில் பெட்ரோலை பிடித்து பார்த்தபோது பெட்ரோலில் தண்ணீர் கலந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சக வாடிக்கையாளர்களும் பங்க் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.