நீலகிரி மாவட்டம் உதகை அருகே குறுகிய சாலையில் அதிக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காந்தல் பகுதியில் இருந்து மார்க்கெட் செல்லும் சாலை குறுகிய பகுதியாக உள்ள நிலையில், வாகன ஓட்டிகள் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இதனால் அவ்வழியாகச் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ், அரசு பேருந்துகள் உள்ளிட்டவை மிகுந்த சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை எளிதாக்க எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.