நேபாள வன்முறையின்போது தீ வைக்கப்பட்ட ஹோட்டலில் இருந்து குதித்த இந்திய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த ராம்வீர் சிங் மற்றும் அவரது மனைவி ராஜேஷ் தேவி ஆகியோர் நேபாளத்துக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றிருந்தனர்.
காத்மண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயில் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களைக் காண்பதற்காகச் செப்டம்பர் 7 ஆம் தேதி விடுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில் 9ம் தேதி அங்கு போராட்டம் வெடித்து வன்முறை ஏற்பட்டது.
அப்போது ராஜேஸ்தேவி தங்கியிருந்த விடுதிக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். விடுதி முழுவதும் தீ பரவியதால் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
தரை தளத்தில் படுக்கைகளை போட்டு அனைவரையும் மீட்புப் படையினர் குதிக்குமாறு அறிவுறுத்தனர். அப்போது 4ஆவது மாடியில் இருந்து குதித்த ராஜேஷ் தேவி, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது கணவர் லேசான காயமடைந்தார்.