விமானம் விபத்தக்குள்ளாவதை தடுக்கும் வகையில் விமானத்தை சுற்றி ஏர்பேக் இருக்கும் தொழில்நுட்பத்திற்கான யோசனையை 2 பொறியாளர்கள் வழங்கியுள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.
இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக விமான விபத்துகள் ஏற்படுவதை தடுக்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வாசிம், தர்சன் ஸ்ரீனிவாசன் ஆகிய இரண்டு பொறியாளர்கள் விமான விபத்தை தடுக்க மறுபிறப்புத் திட்டம் என்ற யோசனையை ஜேம்ஸ் டைசன் விருதுக்குச் சமர்ப்பித்துள்ளனர்.
இந்தத் திட்டத்தில் விமானத்தின் வெளிப்புறத்தில் ஸ்மார்ட் ஏர் பேக்குகள் அமைக்கப்படும் எனவும் இயந்திரம் செயலிழந்தால் AI மூலம் தானாகவே காற்றை நிரப்பி விமானம் கீழே விழுந்து நொறுங்குவதைத் தவிர்க்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மாதிரிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.