இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக அந்நாட்டு அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இருநாடுகளின் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தை கௌரவமளிக்கும் வகையில் வரவேற்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் அந்நாட்டு அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இலங்கைப் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது முதலில் இந்தியா உதவியதற்கு நன்றித் தெரிவித்தார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இந்தியாவின் பங்கு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சுகாதாரம் மற்றும் கல்வியில் இந்தியாவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு உயிர்நாடியாக இருப்பதாகவும் நளந்த ஜெயதிஸ்ஸ புகழாரம் சூட்டினார்.