அமெரிக்காவில் பனிப்பாறையிலிருந்து 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பனிச்சறுக்கு வீரர் உயிருடன் மீட்கப்பட்டார்.
அந்நாட்டின் கொலராடோவின் ரோலின்ஸ் பகுதியில் பனிச்சறுக்கு வீரர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பனிப்பாறையிலிருந்து 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதுதொடர்பான தகவல் அந்நாட்டு மீட்புக் குழுவினருக்குத் தெரியவந்தது.
இதனையடுத்து, மீட்புக்குழுவினர், காயமடைந்த பனிச்சறுக்கு வீரருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், கயிறு கட்டி ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.