நாட்டின் வளர்ச்சியை தடுக்கவும், இழிவுபடுத்தவும் செயல்படும் கும்பலுடன் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகோயின் மனைவி சம்பந்தப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பகீர்க் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கவுரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்னுக்குப் பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாக ஹிமந்த பிஸ்வா சர்மா முன்னதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
கோகோயின் மனைவி பாகிஸ்தான் அரசிடம் இருந்து ஊதியம் பெற்றதாகவும், பலமுறை அங்கு சென்று வந்ததாகவும் அவர் கடுமையாக சாடியிருந்தார்.
இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு, அம்மாநில அரசிடம் சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இது தொடர்பாகப் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை மிகவும் பயங்கரமாக இருப்பதாகவும், நாட்டின் வளர்ச்சியை தடுக்கவும், இழிவுபடுத்தவும் ஒரு கும்பல் செயல்பட்டுள்ளதாகவும் மீண்டும் குற்றம்சாட்டினார்.
மேலும் இதில் பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற கவுரவ் கோகோயின் மனைவி எலிசபெத் சம்பந்தப்பட்டுள்ளது மிகவும் தெளிவாகத் தெரிவதாகவும் கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி, சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை குறித்து மாநில அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கபட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.