அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை - குற்றவாளி சிக்கியது எப்படி?
Sep 12, 2026, 11:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை – குற்றவாளி சிக்கியது எப்படி?

Murugesan M by Murugesan M
Sep 13, 2025, 08:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க்கை கொலை செய்த குற்றவாளி 33 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பிடிபட்டது எப்படி?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

அந்தச் சம்பவம் நடந்தது செப்டம்பர் 10ம் தேதி. அன்றைய தினம் அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உள்ள உட்டா பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

அவர்களுக்கு மத்தியில், சார்லி கிர்க் உரையாற்றிக்கொண்டிருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மிக நெருங்கிய நண்பரான இவர், தீவிர வலதுசாரி ஆர்வலராக அறியப்படுகிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்-க்கு ஆதரவாக இவர் மிகத் தீவிர பரப்புரை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், உட்டா பல்கலைக்கழகத்தில் அவர்  பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென எங்கிருந்தோ ஒரு குண்டு பாய்ந்து வந்து அவரது கழுத்தில் பாய்ந்தது. கண்ணிமைக்கும் நேரம்தான். அவர் அப்படியே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

என்ன நடக்கிறது? யார்  தாக்குதல் நடத்தினார்கள்? எங்கிருந்து அந்தக் குண்டு பாய்ந்து வந்தது?… யாருக்கும் தெரியவில்லை. அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் செய்வதறியாது நாலாபுறமும் அலறியடித்தபடி ஓட தொடங்கினர்.

சார்லி கிர்  சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற தகவல் பரவியதும் ஒட்டுமொத்த  பரபரப்பு பற்றிக்கொண்டது. கடந்தாண்டு இதேபோலத்தான் ட்ரம்ப்பைக் கொல்லவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது நூலிழையில் அவர் உயிர்தப்பினார். அதேபோன்ற தாக்குதல்தான் இந்தமுறை நடத்தப்பட்டு, அவரது ஆதரவாளர்க் கொல்லப்பட்டுள்ளார்.

கொலையாளியைப் பிடிக்க உடனடியாகத் தனிப்படை அமைக்கப்பட்டது. கொலைக் குறித்த வீடியோக்களை ஆய்வு செய்தபோது, மெரூன் நிற டீ-சர்ட் அணிந்த இளைஞர் ஒருவரின் நடவடிக்கைப் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த இளைஞரின் பெயர் டெய்லர் ராபின்சன். அவரது வயது வெறும் 22 வயதுதான்.

அந்த வீடியோ வெளியிடப்பட்ட நிலையில், அதனை டெய்லர் ராபின்சனின் தந்தையும் பார்த்தார். உடனடியாகத் தனது மகனைத் தொடர்புகொண்ட அவர், போலீசில் சரணடையும்படி வலியுறுத்தியுள்ளார். ஆனால், டெய்லர் ராபின்சன் கேட்பதாக இல்லை. உடனே, தனக்குத் தெரிந்த பாதிரியாரின் உதவியை நாடிய அவர், தனது மகனிடம் அவரைப் பேச வைத்தார். ஒருவழியாக டெய்லர் ராபின்சன் சரணடைய சம்மதிக்கவே, அந்தப் பாதிரியார் போலீசாருக்குத் தகவல் அளித்தார்.

இதனையடுத்துக் கொலை சம்பவம் நிகழ்ந்த 33 மணிநேரத்தில் டெய்லர் ராபின்சன் கைது செய்யப்பட்டார். இதனிடையே, தனது நண்பன் ஒருவனைத் தொடர்புகொண்ட ராபின்சன், துப்பாக்கியைத் துணியில் சுற்றிப் புதரொன்றில் மறைத்து வைத்துள்ளதாகக் கூறியிருந்தார். அதனடிப்படையில் அந்தத் துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.

சார்லி கிர்க்கைக் கொலை செய்தபோது அவர் மெரூன் நிற டி-சர்ட், சாம்பல் நிற பேண்ட், வெள்ளை லோகோவுடன் கூடிய கருப்பு தொப்பி, சாம்பல் நிற ஷூ அணிந்திருந்தார். 33 மணிநேரம் கழித்து அவர்  கைது செய்யப்பட்டபோதும் அவர் அதே உடையில்தான் இருந்தார்.

அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சார்லி கிர்க்கை அவர்க் கொலை செய்யக் காரணம் என்ன? அவருக்குப் பின்னால் வேறு யாரேனும் உள்ளார்களா? என்பது குறித்த கேள்விகளுக்கான விடை, முழுமையான விசாரணைக்குப் பிறகுதான் தெரியவரும்.

Tags: usaDonald TrumpThe murder of Charlie Geer that shocked America - how was the culprit caught?அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை
Share
Tweet
SendShare
Previous Post

கோகோயின் மனைவிக்கு பாக். உடன் தொடர்பு – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு! 

Next Post

தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies