மேற்கு வங்காளத்தில் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் பத்திரமாக மீட்டார்.
பங்குரா ரயில் நிலையத்தில் 62 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழுந்தார்.
இதனைப் பார்த்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் உடனடியாக அப்பெண்ணைப் பத்திரமாக காப்பாற்றினர்.
இந்தச் சம்பவம் ரயில்வே நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்த நிலையில் தற்போது வைரலாகி வருகிறது.