கோவை மாவட்டம் சூலூர் அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால் விசைத்தறி தொழிலாளி தனது மனைவியுடன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கத்துறை கிராமத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஆண்டவர், குடும்ப வறுமைக் காரணமாக பலரிடம் கடன் பெற்றுள்ளார்.
எனினும் கடனை அவர் திருப்பி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆண்டவர், அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைச் செய்து கொண்டனர்.
திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் தம்பதி ஏற்கெனவே வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.