தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருத்துவரின் தவறான சிகிச்சையால் மூதாட்டி உயிரிழந்ததாகக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடைக்கலப்பட்டினத்தைச் சேர்ந்த சரவணன் என்ற மருத்துவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பம்மாள் என்ற மூதாட்டி நீரிழிவு நோய்-க்கு சிகிச்சைப் பெற்றதாகவும் சிகிச்சைப் பெற்ற சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
மருத்துவரின் தவறான சிகிச்சையால் மூதாட்டி உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் கிளினிக்கை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த மாவட்ட சுகாதார அலுவலர்கள் கிளினிக்கை ஆய்வு செயதனர். அப்போது கிளினிக் அனுமதியின்றிச் செயல்பட்டது தெரியவந்ததை அடுத்து அதற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.