தனது சிம்பொனி இசையை தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இதுகுறித்து பேசியவர்,
எனது சிம்பொனி இசையை தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்றும் இதைவிட பெரிய மைதானத்தில் மீண்டும் சிம்பொனி இசையை நடத்துவேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.
எனக்குப் பாராட்டு விழா நடைபெறுவதை என்னால் நம்ப முடியவில்லை என்றும் பல கட்டுப்பாடுகளை மீறி 35 நாளில் சிம்பொனி உருவாக்கினேன் என்று இளையராஜா குறிப்பிட்டார்.
சிம்பொனி உருவாக்கியதற்காக முதலில் தனது குழந்தைகளுக்கு நன்றித் தெரிவிக்கிறேன் என்றும் இந்த இசைக்காகத் தனது குழந்தைகளுடன் நேரம் செலவிடவில்லை என இளையராஜா கூறினார்.