கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு இந்தாண்டு இதுவரை 220 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
துமகூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகத்தில் இந்த ஆண்டு நல்ல மழைப் பெய்துள்ளது என்று கூறினார்.
தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 177 டி.எம்.சி. திறக்க வேண்டும், ஆனால் இந்த ஆண்டு இதுவரை 220 டி.எம்.சி. காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட்டுள்ளோம் எனக் கூறினார்.
ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஹேமாவதி இணைப்பு கால்வாய் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் சிவக்குமார் தெரிவித்தார்.