கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கான மின்கம்பத்தின் மீது வாகனம் மோதியதால் நீண்ட நேரமாக மின்சாரம் இன்றி நோயாளிகள் அவதி அடைந்தனர்.
மருத்துவமனையின் பின்புறம் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக நகராட்சி வாகனம் ஒன்று வந்தது. அப்போது வாகனம் மோதியதில் மின்கம்பம் சரிந்து விழுந்ததால் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதுதொடர்பாகத் தகவல் தெரிவித்தும் மின்வாரிய அதிகாரிகள் நீண்ட நேரமாகச் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இணைப்பால் மின்சாரம் வழங்கப்பட்டது.