ஈரோடு அருகே தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுகக் கவுன்சிலர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிக்கோவில் குட்டைக்காடு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சோதனை நடத்திய போலீசார், கள்ளச்சாராயம் காய்ச்சியதாகப் பெத்தாம்பாளையம் திமுகக் கவுன்சிலர் சுரேஷ்குமார் மற்றும் முத்துச்சாமி ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 லிட்டர் கள்ளச்சாராயம் உள்ளிட்டவைப் பறிமுதல் செய்யப்பட்டன.