மதுரை மேலூரில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி கடைகளில் பணம் வசூலித்த நபரை, நிர்வாகிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மேலூரில் பாஜக சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகக் கூறி, கடைகளில் சிலர் பணம் வசூலித்துள்ளனர்.
இதுகுறித்துத் தகவலறிந்த மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமையிலான பாஜகவினர், பணம் வசூலில் ஈடுபட்ட நபரைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் மதுரையை சேர்ந்த வைரமுத்து என்பதும், பாஜகவை சேர்ந்தவர் எனக்கூறி பணம் வசூலித்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து வைரமுத்துவைப் பிடித்து மேலூர் காவல் நிலையத்தில் பாஜகவினர் ஒப்படைத்தனர்.